க்னூ/லினக்ஸ் (GNU/Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும்..
இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் க்னூ/லினக்ஸ் என்பதேயாகும்.
* 1983: ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் க்னூ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் யுனிக்ஸ்">யுனிக்ஸ் இயக்குதளத்தை ஒத்த திறந்த ஆணைமூல இயக்குதளம் ஒன்றினை உருவாக்குதலை நோக்கமாக கொண்டிருந்தது.
* 1990: க்னூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான செயலிகள் (இன்னமும் எழுதப்படவில்லை)">செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
* 1991: லினக்ஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், அக்காலத்தில் அவருக்கு பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர், இயங்குதளங்களை பற்றி கற்பிப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த மினிக்ஸ் (இன்னமும் எழுதப்படவில்லை)">மினிக்ஸ் என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
* 1991 செப்டெம்பர் 17: லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான நிரலாளர்கள் (இன்னமும் எழுதப்படவில்லை)">நிரலாளர்கள் லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினக்ஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
No comments:
New comments are not allowed.